பாலாவை பார்த்து அப்படி சொன்ன ஆரி... கடுப்பாகி பதிவிட்ட பிரபல நடிகை..."ஆரி பல சமயம் இப்படி.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில்  கடந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில்  வெற்றி பெறும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்களின் மனவலிமையையும், உடல் வலிமையையும் பரிசோதிக்கும் வகையில் அவை இருக்கின்றன. அப்படி இந்த வாரம் கொடுக்கப் பட்ட ஒரு டாஸ்க்கில் பாலா ஆரியை பார்த்து "எதற்காக ஓடுகிறீர்கள்" என்று கேட்க, அதற்கு ஆரி "ஓடிவந்து பிடிக்க வேண்டியதுதானே. நீ ஆம்பள பையன் தானே" என்று கேட்டார். இதைப் பார்த்த பாலா ரசிகர்கள் "ஆரி அப்படி கேட்டிருக்க வேண்டாம். கோபத்தில் அவர் கூட சில வார்த்தைகளை விடுகிறார்" என்பது போல கமெண்ட் செய்து வந்தனர்.

பாலாவை பார்த்து அப்படி சொன்ன ஆரி... கடுப்பாகி பதிவிட்ட பிரபல நடிகைpopualr actress criticize aari

இந்நிலையில் இதுபற்றி நடிகை ஸ்ரீபிரியா தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி  மிகச்சிறந்த தன்மையாளராக இருக்கலாம். ஆனால் பல சமயங்களில் மற்றவர்களை தூண்டி விடுகிறார். ...ஆம்பளை... பொம்பளை.... இது தேவையில்லாதது" என்று தனது கருத்தை கூறியுள்ளார். ஏனென்றால் ஆண்கள் மட்டும் தான் ஓடி வர முடியுமா, பெண்களும் ஆண்களுக்கு எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதுதான் ரசிகர்களின் எண்ணம். இந்நிலையில் இதுபற்றி கமல் இன்று விளக்கம் கேட்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Tags : Aari, Sripriya

தொடர்புடைய இணைப்புகள்

பாலாவை பார்த்து அப்படி சொன்ன ஆரி... கடுப்பாகி பதிவிட்ட பிரபல நடிகைpopualr actress criticize aari

People looking for online information on Aari, Sripriya will find this news story useful.