'பாவக்கதைகள்' காளிதாஸ் ஜெயராமை சந்தித்த தளபதி விஜய்... அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து "பாவ கதைகள்" என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இந்த படம்  Netflix தளத்தில் வெளியிட்டுள்ளனர். மொத்தமாக பார்க்கும்போது, ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் ஆகியவற்றால் ஏற்படும் தீவினைகள் குறித்து விமர்சிக்கக்கூடிய படங்களாகவே இருக்கின்றன.

'பாவக்கதைகள்' காளிதாஸ் ஜெயராமை சந்தித்த தளபதி விஜய் உருக்கமான பதிவு vijay and kalidas viral photo

இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சாந்தனு, காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'தங்கம்' பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர் பற்றிய இந்த படம் பார்ப்பவர்கள் மனதை உருக்கும் வண்ணம் இருந்தது என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அதிலும் முக்கியமாக நடிகர் காளிதாஸ் ஜெயராமின் சிறப்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.  சமீபத்தில் தங்கம் குழுவினருடன் லைவில் வந்தது சாந்தனு கூறும்போது தளபதி விஜய் இந்த படத்தை பார்த்துவிட்டு தனக்கு போன் செய்ததை பற்றி சாந்தனு கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது காளிதாஸ் தனது இன்ஸ்ட்டாகிராமில் தளபதி விஜய்யுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதற்க்கு தலைப்பாக "இனி எதுவுமே சிறப்பாக மாற போவதில்லை என்று நான் நினைத்த போது நடந்த அற்புதம். மாணவனை சந்தித்த மாஸ்டர். விஜய் சார் உங்கள் நேரத்தை எனக்காக ஒதுக்கியதற்காக நன்றி" என்று எமோஷனலாக கூறியுள்ளார்.

Tags : Vijay

தொடர்புடைய இணைப்புகள்

'பாவக்கதைகள்' காளிதாஸ் ஜெயராமை சந்தித்த தளபதி விஜய் உருக்கமான பதிவு vijay and kalidas viral photo

People looking for online information on Vijay will find this news story useful.