பிரசாரத்துக்கு சென்ற இடத்தில் ஆரியின் பெயரை கோஷம் போட்ட ரசிகர்கள்... வைரல் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இறுதிப் போட்டிக்கு அனைவரும் தயாராக உள்ள நிலையில், டைட்டிலை யார் கைப்பற்றுவார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும் ஆரி தான் டைட்டில் ஜெயிப்பார் என்று பலரும் யூகித்து வருகின்றனர். எதுவாயிருந்தாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

aari fans interesting incident with kamal

aari fans interesting incident with kamal ஆரியின் பெயரை கோஷம் போட்ட ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 சீசன்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். மக்களின் பிரதிநிதியாக அவர் எடுத்து வைக்கும் கருத்துக்களும் மிகச்சரியாக இருக்கின்றது.

அந்த வகையில் தற்போது நடிகர் கமல் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேரடியாக மக்களிடம் சென்று அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்படி பிரசாரத்துக்கு சென்ற இடத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

ரசிகர்கள் சிலர் ஆரியின் பெயரை சொல்லி கோஷமிடுகின்றனர். அதன்பிறகு 'பிக்பாஸ்' என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்வதை பார்க்க முடிகிறது. உடனே நடிகர் கமல் பேசுவதை நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்கிறார். இதிலிருந்து மக்களிடம் ஆரிக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கை புரிந்துகொள்ள முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kamal, Aari

தொடர்புடைய இணைப்புகள்

aari fans interesting incident with kamal ஆரியின் பெயரை கோஷம் போட்ட ரசிகர்கள்

People looking for online information on Aari, Kamal will find this news story useful.