குற்றங்களை கணக்குகளின் அடிப்படையில் தீர்க்கும் மேதை... வெளியானது விக்ரமின் கோப்ரா டீசர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சியான் விக்ரம் 7 கேரக்டர்களில் நடிக்கும் படம் கோப்ரா. இந்த படத்தை இமைக்கா நொடிகள், டிமான்ட்டி காலனி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கிறார். இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார். சயின்ஸ் பிக்ஷன் முறையில் உருவாகும் இந்தப் படம் மே மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் தள்ளி போயின.

குற்றங்களை கணக்குகளின் அடிப்படையில் தீர்க்கும் மேதை... விக்ரமின் கோப்ரா டீசர்..!Actor Vikram Cobra Teaser Released

படத்தின் தயாரிப்பு நிறுவனமான Seven Screen Studio நிறுவனம் சார்பில் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.  இந்நிலையில் கோப்ரா படம் பற்றிய வேற லெவல் விஷயம் வைரலானது. ஆம் இதில் நடிகர் விக்ரம் டபுள் ரோலில் நடிக்கிறார் என்று. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோப்ரா படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. டீசரின் அடிப்படையில் கோப்ரா (விக்ரம்) ஒரு கணித அறிஞராகவும், எப்பேர்ப்பட்ட குற்றங்களையும் கணக்குகளின் அடிப்படையில் தீர்த்து வைக்கும் ஒரு நபராக இருக்கிறார்.

இந்நிலையில் இதனால் கிடைத்த புகழினால் அவர் சிலரின் சதி வலைக்குள் விழுவது போலவும் டீசர்  இருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் கோப்ரா டீசர் நிச்சயம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்று சொல்லலாம்.

குற்றங்களை கணக்குகளின் அடிப்படையில் தீர்க்கும் மேதை... வெளியானது விக்ரமின் கோப்ரா டீசர்..! வீடியோ

Tags : Cobra, Vikram

தொடர்புடைய இணைப்புகள்

குற்றங்களை கணக்குகளின் அடிப்படையில் தீர்க்கும் மேதை... விக்ரமின் கோப்ரா டீசர்..!Actor Vikram Cobra Teaser Released

People looking for online information on Cobra, Vikram will find this news story useful.