www.garudabazaar.com

VVS & ரஜினி முருகனுடன் DSP.. உருவாகும் பொன்ராம் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்! EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பொன்ராம், பொன்ராம் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் குறித்து நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் பதில் அளித்துள்ளார்.

Pon Ram Talks about VVS Rajini Murugan Multiverse with DSP

Also Read | டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருடன் ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை திருமணம்.. வைரல் புகைப்படங்கள்!

இயக்குனர் பொன்ராம், ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் & செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்தது.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.

DSP திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பொன்ராம், நடிகை அனு கீர்த்தி வஸ் பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில் பொன்ராம் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் பொன்ராம், "வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் & ரஜினி முருகன் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் இரண்டையும் இணைத்து ஒரு ஸ்கிரிப்ட் உருவாக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த மல்டிவெர்ஸில் DSP இணைவாரா? என்ற கேள்விக்கு, "சரிங்க சார் மல்டி பண்ணுவோம்" என விஜய் சேதுபதி பதில் அளித்துள்ளார்.

Also Read | மாலத்தீவில் மாளவிகா மோகனன்.. பிரேமம் ஒளிப்பதிவாளருடன் செம Fun.. வீடியோ!

VVS & ரஜினி முருகனுடன் DSP.. உருவாகும் பொன்ராம் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்! EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pon Ram Talks about VVS Rajini Murugan Multiverse with DSP

People looking for online information on DSP, Pon Ram, Rajini Murugan, VVS will find this news story useful.