www.garudabazaar.com

DSP: போலீஸ் கெட்டப்பில் மாஸ் லுக்கில் விஜய் சேதுபதி.. பட ரிலீஸ் எப்போ? முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கும்  புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Vijay Sethupathi DSP Movie First Look Poster

Also Read | பிரபல அஜித் படத்தின் ரிலீஸ் ஆகாத டிரெய்லர்ப்பா இது 😍 .. முன்னணி எடிட்டரின் தெறி வீடியோ...

கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார். 

இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி வாஸ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. . 23 வயதான  திருச்சியை சேர்ந்த இவர் விளம்பர மாடலாக தற்போது வலம் வருகிறார்.இவர் உலக அழகி போட்டியில் முதல் 30 இடங்களுக்குள் வந்தவர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கியது. இந்த படத்தில் திண்டுக்கல் மாவட்ட DSP ஆக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இன்று வெளியான படத்தின் தலைப்பும் DSP என்றே வைக்கப்பட்டுள்ளது. வாஸ்கோடகாமா என்ற போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்  செங்கல்பட்டில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.

Vijay Sethupathi DSP Movie First Look Poster

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் செந்நிற பிண்ணனியில் திண்டுக்கல் நகரம் அமைந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்கில் விஜய் சேதுபதி போலீஸ் கெட்டப்பில் வருவது போல் போஸ்டர் அமைந்துள்ளது. இந்த போஸ்டரை டிசைனர் டியூனி ஜான் வடிவமைத்துள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி, ஜவான், மும்பைக்கர், மெரி கிறிஸ்துமஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Also Read | துணிவு படத்துக்காக சந்திச்ச H. வினோத் - ஜிப்ரான்.. இதான் விஷயமா? படு குஷியில் ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi DSP Movie First Look Poster

People looking for online information on DSP Movie, DSP Movie First Look Poster, Vijay Sethupathi will find this news story useful.