www.garudabazaar.com

பிரபல சொகுசு கப்பலில் நடிகை கௌரி கிஷன்.. அவரே வெளியிட்ட டூர் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சொகுசு கப்பலில் இருந்து நடிகை கௌரி கிஷன் பகிர்ந்த  புதிய வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

Actress Gouri G Kishan at Cordelia Cruises

Also Read | BABA : ரஜினி நடிப்பில் பாபா ... வந்தாச்சு அதிகாரப்பூர்வ ரீ ரிலீஸ் தேதி.. வேகமாக புக் ஆகும் TICKETS..

கேரளா மாநிலம் அடூரை சார்ந்த நடிகை கௌரி கிஷன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 (2018) திரைப்படத்தில் 'ஜானு' (ஜானுவின் இளவயது பெண்) பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்த படம் இவருக்கு முதல் அறிமுக படமாகும்.

2019 இல், நடிகை கௌரி கிஷன் மார்கம்களி (2019) மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். 2019 இல், ஹாய் ஹலோ காதல் என்ற குறும்படத்திலும் நடித்தார். பின் தனது தமிழ் அறிமுகமான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு (2020) இல் ஜானுவாக மீண்டும் நடித்தார்.

Actress Gouri G Kishan at Cordelia Cruises

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் (2021) படத்தில் கல்லூரி மாணவியாக நடித்தார். மாரிசெல்வராஜ் இயக்கிய கர்ணன் (2021)  படத்திலும் கௌரி நடித்துள்ளார். கடைசியாக பேப்பர் ராக்கெட் (வெப் சீரிஸ்), "புத்தம் புது காலை விடியாதா", மகிழினி என்ற ஆல்பம் ஆகியவற்றில் தோன்றி இருந்தார்.

தற்போது கௌரி கிஷன்,  அனுராகம், பிகினிங், ஶ்ரீ தேவி ஷோபன் பாபு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கௌரி கிஷன், கோவாவில் நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் அங்கு கடற்கரையில் இருந்து நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள்  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

Actress Gouri G Kishan at Cordelia Cruises

இந்நிலையில் இந்தியாவின் பிரபல முன்னணி சொகுசு கப்பலான Cordelia Cruises கப்பலில் பயணம் செய்யும் வீடியோவை நடிகை கௌரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது நண்பர்களுடன் பயணம் செய்த புகைப்படங்கள் & கப்பலில் உள்ள வசதிகளை ஒருங்கிணைப்பு செய்து, தனி வீடியோவாக கௌரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | பிரபல கோயிலில் குழந்தைக்கும் கணவருக்கும் மொட்டை.. நடிகை பிரணிதா வெளியிட்ட போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Gouri G Kishan at Cordelia Cruises

People looking for online information on Cordelia Cruises, Gouri G Kishan, Gouri G Kishan at Cordelia Cruises will find this news story useful.