டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருடன் ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை திருமணம்.. வைரல் புகைப்படங்கள்!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா பன்டேக்கர் திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Also Read | பிரபல சொகுசு கப்பலில் நடிகை கௌரி கிஷன்.. அவரே வெளியிட்ட டூர் வீடியோ!
நடிகை ஸ்வேதா பன்டேக்கர், 2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'ஆழ்வார்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். பின்னர் பூவா தலையா, வள்ளுவனும் வாசுகியும், மீராவுடன் கிருஷ்ணன், நான்தான் பாலா, பூலோகம் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகள்’ சீரியலில் நடித்துள்ள ஸ்வேதா, 'சந்திரலேகா' சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த சீரியலில் நடிகை ஸ்வேதா பன்டேக்கர் முன்னணி வேடத்தில் நடித்தார்.
2000 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த இந்த சீரியல் இந்த வருடம் அக்டோபர் மாதம் நிறைவடைந்தது.
2014 ஆம் ஆண்டு தொடங்கி 2022 வரை 'சந்திரலேகா' 8 வருடங்களாக ஒளிபரப்பாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் சன் மியூசிக் தொகுப்பாளரான மால் மருகாவை திருமணம் செய்துள்ளார். தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்வேதா பன்டேக்கருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Also Read | பிரபல கோயிலில் குழந்தைக்கும் கணவருக்கும் மொட்டை.. நடிகை பிரணிதா வெளியிட்ட போட்டோஸ்!