நடிகர் சங்க தேர்தல் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இன்று நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்த இந்த தேர்தலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1604 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

கமல் ஹாஸன், விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், ஆர்யா உள்ளிட்ட ஏராளமானோர் வாக்களித்தனர். அஜித் வாக்களிக்க வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. நடிகர் சந்தானம் வாக்களித்துவிட்டு தனது ஆதரவு பாண்டவர் அணிக்கே என்றார்
ஆர்யா சைக்கிள் ஓட்டியபடியே வந்து வாக்களித்தார். தர்பார் படப்பிடிப்பில் மும்பையில் இருக்கும் ரஜினிகாந்துக்கு தபால் ஓட்டு தாமதமாக சென்றதால் அவரால் ஓட்டு போட முடியவில்லை. பிரச்சார வீடியோவில் பாண்டவர் அணியினர் தனது தந்தை சரத்குமாரை தாக்கிப் பேசியதை பார்த்த வரலட்சுமி கோபம் அடைந்து விஷாலை விளாசி ட்வீட் போட்டார். உங்களுக்கு என் ஓட்டு இல்லை என்றார். இந்நிலையில் அவரும் இன்று வாக்களித்துள்ளார். அந்த ஓட்டு கண்டிப்பாக விஷால் அணிக்கு கிடைத்திருக்காது என்று நம்பப்படுகிறது.
எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்