நடிகர் சங்கத் தேர்தல் இன்று(23.06.2019) சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றுவருகிறது. காலை முதலே திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய், ஆர்யா, கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சூர்யா தனது தந்தை சிவகுமாருடன் நேரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
தமிழ்தாய் திரைப்பட நடிகர்கள் சங்கம் என்று பெயர் மாற்ற வேண்டும் என நடிகர் விஜய் குமார் கோரிக்கை விடுத்தார். பின்னர் பேசிய விவேக், நடிகர் சங்கம் என்பது 2000 பேர் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு. நிறைய மக்கள் மழை நீர் சேகரிப்பு, ஏரிகள் தூர் வாறுதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். அதனையும் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று செய்தியாளர்களிடம் கோரிக்கை வைத்தார்.
நடிகர் சங்கத் தேர்தலுக்காக மாஸ் எண்ட்ரி கொடுத்த சூர்யாவும், விக்ரமும் வீடியோ