நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இன்று ( 23.06.2019) நடைபெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றுவருகிறது.

தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே தனக்கு தபால் ஓட்டு கிடைக்கப்பெறாததால் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர்கள் பெஞ்சமின், சிங்காரவேலன் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ''எங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டதற்கு நீங்கள் வெளியூர் முகவரி அளித்துள்ளீர்கள் என்று கூறுகின்றனர். மேலும் போஸ்டல்ல தான் ஓட்டு போடனும் என்கின்றனர்.
எங்கள் ஓட்டுரிமை பரிக்கப்படுகிறது. இது ஜனநாயகப் படுகொலை. எனக்கு எந்த தபாலும் வரல.என்றார். பின்னர் பேசிய பெஞ்சமின், நான் ஒன்பது வருடங்கள் நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு ஓட்டு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்'' என்றனர்.
''எங்களுக்கு ஓட்டு இல்லையா ?'' - குமுறும் நடிகர்கள் வீடியோ