Fakir Other Banner USA
www.garudabazaar.com

''கண்ட பூச்சி எல்லாம்...'' - நடிகர் சங்கத் தேர்தல் குறித்து சாந்தனு நக்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தல் இன்று (23.06.2019) விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றனர்.

Shanthanu tweets about Bhagyaraj and Nadigar Sangam Election

இந்த தேர்தலில் திரைப்பட மற்றும் நாடக நடிகர், நடிகைகள் தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர். நேரில் வந்து வாக்களிக்க இயலாதவர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலமாக பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் 'நான் மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறேன். தபால் சீட்டு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க இயலவில்லை. இதை எண்ணி மிகவும் வருந்துகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் ஒரு பகுதியாக சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாக போட்டியிடும் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், 'கண்ட பூச்சி எல்லாம் ''பாக்யராஜ் யாரு நடிகரா?''னு கேட்டாராம். கார்த்தி, விஷால், இது போன்றவற்றை நீங்கள் அனுமதித்தால் உறவுகள் மோசமாகிவிடும். உங்களுக்கு உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் முன் வந்து கேள்வி எழுப்புங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.