'தளபதி 64' தயாரிப்பாளருடன் நியூ லுக்கில் நடிகர் விஜய் - வைரலாகும் ஃபோட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 28, 2019 10:19 AM
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தலைநகர் டெல்லியில் விறுவிறுப்பாக நடைபற்றுவருகிறது.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்துவருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய் இருக்கும் புகைப்படம தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.