பிரபல ஹீரோவுடன் வெங்கட் பிரபு இணையும் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் படம் 'மாநாடு'. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Venkat Prabhu and Vaibhav movie may release in September

இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க விருக்கிறார். இதனையடுத்து வெங்கட் பிரப தயாரிக்கும் படம் கசட தபற.  இந்த படத்தை சிம்பு தேவன் இயக்குகிறார்.

இந்நிலையில் பிரபல நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் ஒரு படத்தில் வைபவும், வெங்கட் பிரபுவும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தை தனி ஒருவன் இயக்குநர் மோகன் ராஜாவின் இணை இயக்குநர் பிரபு சார்லஸ் இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை வருகிற செப்டம்பர் மாதம் வெளியிட இந்த படத்தின்  தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.