கமலா... - சங்கத் தமிழன் படத்தில் இருந்து வெளியான செம குத்து பாட்டு புரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜயா புரொடக்ஷன் சார்பில் பாரதி ரெட்டி தயாரித்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படம் 'சங்கத்தமிழன்'. இந்த படத்தை வாலு, ஸ்கெட்ச் படங்களின் இயக்குநர் விஜய் சந்தர் இயக்கி வருகிறார்.

Kamala Song promo is out from Vijay Sethupathi's SangaThamizhan

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கின்றனர். இந்த படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்க, வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கமலா என்ற பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை கு.கார்த்திக் எழுத, விவேக் சிவா மற்றும் சஞ்சனா கல்மாஞ்சே பாடியுள்ளனர்.

கமலா... - சங்கத் தமிழன் படத்தில் இருந்து வெளியான செம குத்து பாட்டு புரோமோ வீடியோ