www.garudabazaar.com

'பத்து தல' இசை வெளியீட்டு விழா.. சிம்புவை நெகிழ வைத்த கமல்ஹாசன், விஜய், தனுஷ்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Pathu Thala Audio Launch Vijay Kamal Dhanush Clippings

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர்  வெளியானது. இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிம்பு குறித்து நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், தனுஷ் ஆகியோர் பேசும் காணொளி ஒளிபரப்பப்பட்டது. குறிப்பாக கமல்ஹாசன், விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய காட்சிகளும், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு குறித்து விஜய் பேசும் காட்சிகளும், மற்றொரு நிகழ்வில் "சிம்பு அளவுக்கு தன்னால் நடனம் ஆட முடியாது" என தனுஷ் பேசிய காட்சிகளும் பத்து தல இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பப்பட்டது. இதை கண்ட சிம்பு நெகிழ்ச்சி அடைந்த தருணமும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

'பத்து தல' இசை வெளியீட்டு விழா.. சிம்புவை நெகிழ வைத்த கமல்ஹாசன், விஜய், தனுஷ்! வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pathu Thala Audio Launch Vijay Kamal Dhanush Clippings

People looking for online information on Dhanush, Kamal Haasan, Pathu Thala, Silambarasan TR, Vijay will find this news story useful.