www.garudabazaar.com

RRR-க்கு பிறகு Jr NTR நடிக்கும் புதிய படம்.. வெளியான அடுத்த அப்டேட்! இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR நாயகன் ஜூனியர் என் டி ஆர்,  நடிக்கும் புதிய NTR30 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Jr NTR30 Movie Next Update Shooting Poojai Muhurtam on March 23rd

எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஜூனியர் என்டிஆர் முதன்முறையாக ராம் சரண் உடன் இணைந்து நடித்தார். உள்ளூர் பழங்குடியினரின் பாதுகாவலராக கொமரம் பீம் என்ற கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்தார்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர், அடுத்து NTR30-ல் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஜூனியர் NTR ஏற்கனவே ஜனதா கேரஜ் படத்தில் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Jr NTR30 Movie Next Update Shooting Poojai Muhurtam on March 23rd

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை வரும் மார்ச் மாதம் 23 ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு பணிபுரிகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளார்.

Jr NTR30 Movie Next Update Shooting Poojai Muhurtam on March 23rd

NTR30 படத்தை அடுத்து NTR31 படத்தை பிரசாந்த் நீல் இயக்க உள்ளார். பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை முடித்த பின் ஜூனியர் என்டிஆர் படத்தை (NTR31) மைத்ரி மூவி மேக்கர்ஸ்காக பிரசாந்த் நீல் இயக்க உள்ளார்.

Mythri Movie Makers & NTR Arts தயாரிக்கும் NTR31 படத்தின் முதல் லுக் போஸ்டர் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags : NTR30, Jr ntr

Jr NTR30 Movie Next Update Shooting Poojai Muhurtam on March 23rd

People looking for online information on Jr ntr, NTR30 will find this news story useful.