www.garudabazaar.com

"பதான் படம் பெரிய தோல்வி அடையும்" என சொன்ன ரசிகர்.. உடனே ஷாருக்கான் அளித்த தெறி பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் 'பதான்' படம் குறித்து ரசிகர் ஒருவர் பகிர்ந்த ட்வீட்-க்கு ஷாருக்கான் பதில் அளித்துள்ளார்.

Pathaan Sharukh Khan Reply Tweet to a fan Ask SRK

Also Read | "துணிவு ஜனவரி 11, வாரிசு ஜன. 12".. பொங்கல் ரிலீஸ் குறித்து பிஸ்மி EXCLUSIVE

ஷாருக்கான்,  இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

Pathaan Sharukh Khan Reply Tweet to a fan Ask SRK

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமாக உருவாகும் இந்த படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது.

Pathaan Sharukh Khan Reply Tweet to a fan Ask SRK

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் Besharam Rang வீடியோ வடிவில் வெளியானது. மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் Jhoome Jo Pathaan பாடலும் வெளியாகி உள்ளது. விஷால் & சேகர் இந்த பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். பாடலாசிரியர் குமார் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

Pathaan Sharukh Khan Reply Tweet to a fan Ask SRK

இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகர் ஷாருக்கான் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக, பதான் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடையும். சீக்கிரம் ஓய்வு பெறுங்கள் " என நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்ய இதற்கு பதில் அளித்த ஷாருக்கான், "சிறுவனே,  பெரியவர்களிடம் இது போன்று முறையற்று பேசக் கூடாது." என பதில் அளித்துள்ளார்.

 

Also Read | பிரியங்கா மோகனுக்கு நடு ரோட்டில் ரோஜாப்பூ கொடுத்த ரசிகர் 😍.. அதுவும் லண்டன்ல! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pathaan Sharukh Khan Reply Tweet to a fan Ask SRK

People looking for online information on Pathaan, Shah Rukh Khan will find this news story useful.