www.garudabazaar.com

"இதுகளும் சதி பண்ணுதே".. புது Task-ல் அசிம், விக்ரமன் செஞ்ச விஷயம்.. சிரிக்கவே செஞ்சுட்டாங்க 😂!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Azeem and Vikraman in new bread task bigg boss

Also Read | "நாள் நெருங்க நெருங்க".. "எரிமலை எப்படி பொறுக்கும்".. Freeze ஆகி நின்ற ரச்சிதா?.. ADKவின் கமெண்ட் 😅!!

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்.

Azeem and Vikraman in new bread task bigg boss

இதில் Ticket To Finale சுற்றில் அடுத்தடுத்து நிறைய டாஸ்க்குகள் அரங்கேறி வருகிறது. இதில் வெற்றி பெறும் நபர்கள் ஒவ்வொரு சுற்று முடியும் போது புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தும் வருகின்றனர். இதற்கு மத்தியில், Debate டாஸ்க் நடந்திருந்தது. இதில் இரண்டு போட்டியாளர்கள் மாறி மாறி மேற்கொண்டிருந்த நிறைய விவாதங்கள் பெரிய அளவில் விறுவிறுப்பை எகிற வைத்திருந்தது.

இந்த நிலையில், புதிய டாஸ்க் ஒன்றில் அசிம் மற்றும் விக்ரமன் ஆகியோரின் செயல்பாடு தொடர்பான வீடியோ பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.

Azeem and Vikraman in new bread task bigg boss

Bread ஒன்றை கயிற்றில் கட்டி தொங்க போட்டுள்ளனர். இதனை கால் கொண்டு சரியாக இயக்கி அதனை உன்ன வேண்டும் என்பது ஒரு டாஸ்க்காக உள்ளதாக தெரிகிறது. இதில் அனைத்து போட்டியாளர்களும் கடினமாக இயங்கி இருந்தனர். அப்படி ஒரு சூழலில், விக்ரமன் மற்றும் அசிம் ஆகியோர் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Bread டாஸ்க்கின் போது அசிம் மற்றும் விக்ரமன் ஆகியோர் அருகருகே இருக்கின்றனர். அப்போது, இருவரும் பிரெட்டை அருகே கொண்டு வர முடியாமல் திணறவும் செய்கின்றனர். ஒரு பக்கம் அசிம் பிரெட்டை அருகே கொண்டு வர முயல, மறுபக்கம் வாய்க்கு அருகே பிரெட்டை கொண்டு வந்த பிறகும் அதனை உண்ண முடியாமல் திணறுகிறார் விக்ரமன்.

Azeem and Vikraman in new bread task bigg boss

இருவரும் டாஸ்க்கிற்கு மத்தியில் சாப்பிட முடியாமல் தவித்ததால் மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கவும் செய்கின்றனர். Ticket To Finale டாஸ்க்கிற்கு இடையே நிறைய பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறினாலும் இது போல ஜாலியான சம்பவங்களும் அரங்கேறாமல் இல்லை.

Also Read | "தயவு செஞ்சு புரிஞ்சிட்டு பேசு".. Task முடிஞ்ச பிறகு கண்ணீர் விட்டு கதறிய ஷிவின்... என்ன ஆச்சு?

தொடர்புடைய இணைப்புகள்

Azeem and Vikraman in new bread task bigg boss

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.