www.garudabazaar.com

சீரியல் நடிகை ப்ரீத்தியை கரம்பிடிக்கும் 'பசங்க' பட இளம் நடிகர் – வைரலாகும் Post!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சசிகுமாரின் தயாரித்து இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய திரைப்படம் பசங்க.

Pasanga actor Kishore introduce his lover serial actress Preethi Kumar

Also Read | AK62: டிவிட்டரில் கவர் போட்டோவை மாற்றிய விக்னேஷ் சிவன்.. அந்த அஜித் லுக் தான் இப்போ வைரல்!

இந்த படத்தில் சிறுவனாக அன்புக்கரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கிஷோர். இந்த படத்தில் நடித்ததற்காக கிஷோர் பல விருதுகளைப் பெற்றார். இதில் தமிழ்நாடு அரசின் விருது, தேசிய விருதுகளும் அடக்கம். அதன் பின்னர் பல படங்களில் கிஷோர் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் கிஷோர், சீரியல் நடிகை  ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Pasanga actor Kishore introduce his lover serial actress Preethi Kumar

நடிகை ப்ரீத்தி குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து  "உன்னை திருமணம் செய்யும் நாளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகிறேன். அடுத்த வருடம் நாம் இருவரும் கணவன் மனைவியாக பிறந்த நாளை கொண்டாடுவோம். "லவ் யூ அச்சோமா" என்று கிஷோர் பதிவிட்டுள்ளார்.

Pasanga actor Kishore introduce his lover serial actress Preethi Kumar

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் மெகா தொடரின் மூலம் நடிகையாக பிரபலமானவர் ப்ரீத்தி குமார். லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, என பல சீரியல்களில் ப்ரீத்தி நடித்துள்ளார்.

Pasanga actor Kishore introduce his lover serial actress Preethi Kumar

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரீத்தி குமார், கிஷோருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, "எப்போதும் உடன் செல்ல வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

Also Read | பிரபல OTT-யில் விஷ்ணு விஷால் நடிப்பில் ஹிட்டான "கட்டா குஸ்தி".. ரிலீஸ் எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Pasanga actor Kishore introduce his lover serial actress Preethi Kumar

People looking for online information on Kishore, Pasanga, Preethi Kumar, Serial Actress, Serial actress Preethi Kumar will find this news story useful.