www.garudabazaar.com

பிரபல OTT-யில் விஷ்ணு விஷால் நடிப்பில் ஹிட்டான "கட்டா குஸ்தி".. ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.

Gatta Kushti Netflix OTT Release Date Announced

Also Read | AK62: டிவிட்டரில் கவர் போட்டோவை மாற்றிய விக்னேஷ் சிவன்.. அந்த அஜித் லுக் தான் இப்போ வைரல்!

இவர் வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார்.

தற்போது விஷ்ணு விஷால் & 'பொன்னியின் செல்வன் பூங்குழலி'  ஐஸ்வர்யா லெஷ்மி நடிப்பில் கட்டா குஸ்தி படம் கடந்த (02.12.2022) அன்று வெளியானது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த படம் பெற்றது.

Gatta Kushti Netflix OTT Release Date Announced

இந்த படம் குஸ்தியைக் கதைக்களமாக கொண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தை விஷணு விஷாலின் விஷணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ’RT டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் தயாரித்தது.

இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பிரசன்னா ஜி கே எடிட்டராகவும், கலை இயக்கத்தை உமேஷ் மேற்கொண்டார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவ் சகோதரர்கள் வடிவமைத்தனர்.

Gatta Kushti Netflix OTT Release Date Announced

இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், கட்டா குஸ்தி படத்தின் பிஸினஸ் 30+ கோடிக்கும் மேல் வியாபாரத்தை தாண்ட உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த வருடத்தில் FIR & கட்டா குஸ்தி இரண்டு படங்களும் வெற்றி படமாக அமைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Gatta Kushti Netflix OTT Release Date Announced

இந்நிலையில் இந்த படம் வரும் புத்தாண்டு அன்று ஜனவரி 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | 25 லட்ச ரூபாய் கடன் வாங்கும் TTF வாசன்.. அவரே சொன்ன காரணம்.. வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Gatta Kushti Netflix OTT Release Date Announced

People looking for online information on Gatta Kushti, Gatta Kushti OTT Release, Netflix, Vishnu Vishal will find this news story useful.