www.garudabazaar.com

இரவின் நிழல் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம்.. கைப்பற்றிய பிரபல சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இரவின் நிழல்' திரைப்படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம் குறித்து பார்த்திபன் தனது யூடியூப் பக்கத்தில்  வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார்.

Parthiban Iravin Nizhal Satellite Rights Bagged by Kalaignar TV

இயக்குனர் நடிகர் பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தைத் தொடர்ந்து நடித்து இயக்கிய திரைப்படம் 'இரவின் நிழல்'. நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் 'நந்து' எனும் சினிமா பைனான்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Parthiban Iravin Nizhal Satellite Rights Bagged by Kalaignar TV

இந்த படத்தினை பார்த்திபனின் அகிரா பிலிம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ்  தயாரித்தது. இப்படத்தில் பார்த்திபன் நாயகனாக நடிக்க, ரோபோ ஷங்கர், வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சகா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்தனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்தார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்தார். கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று

திரையரங்குகளில் இந்த படம் வெளியானது.

அத்துடன் இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்று அங்கீகாரம் பெற்றது.

Parthiban Iravin Nizhal Satellite Rights Bagged by Kalaignar TV

இரவின் நிழல் திரைப்படம் நேற்று முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் இரவின் நிழல் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது குறித்து பேசியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி மூலம் அமேசான் பிரைம் வீடியோ தளத்திற்கு இரவின் நிழல் திரைப்படம் விற்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்த படம் விரைவில் கலைஞர் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் எனவும் கூறியுள்ளார். இதன் மூலம் இரவின் நிழல் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது என்பது உறுதியாகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Parthiban Iravin Nizhal Satellite Rights Bagged by Kalaignar TV

People looking for online information on Iravin nizhal, Kalaignar TV, OTT, Parthiban, Satellite TV Rights will find this news story useful.