போட்றா வெடிய! விஜய்யும் விஜய் சேதுபதியும் இணைையும் தளபதி 64 அதிரடி துவக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

Thalapathy Vijay's Thalapathy 64 Shoot begins with Poojai today

‘மாநகரம்’,‘கைதி’ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் கவனிக்கின்றனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று (அக்.3)ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தளபதி 64 படத்தின் பூஜை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி வரும் டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கதை சொல்வதில் மன்னர்களான விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதவிருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.