பா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 12, 2019 10:41 PM
இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்துள்ள படம் 'இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு'. அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் தினேஷிற்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரித்விகா, முனீஷ்காந்த், ஜான் விஜய், லிஜீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு டென்மா இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் இருந்து மாவுலியோ மாவுலி என்ற வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் உலக அளவில் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.