பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘குண்டு’ படத்தின் பாடல் வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 23, 2019 04:39 PM
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.அறிமுக இசையமைப்பாளர் டென்மாவின் இசையில் 'நிலமெல்லாம் ' என்கிற பாடல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
சித்திரசேனன், அறிவு, கானாமுத்து, ஏழுமலை மற்றும் பேராவூர் ரூபகம் கலைக்குழுவினர் பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் உமாதேவி பாடல் எழுதியிருக்கிறார்.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் பரியேறும்பெருமாள் படத்திற்குப்பிறகு இரண்டாவது படமாக குண்டு படம் வெளிவருகிறது. தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் அவருக்கு பெரும் நம்பிக்கைக்குறிய படமாக இருக்கும் என்கிறார். ஆனந்தி வட தமிழகத்து கிராமத்துபெண்ணாக இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
புதிய பாடகர்களை முதல் படத்திலேயே பாட வைப்பதன் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தைதரமுடியும் என்கிறார் அறிமுக இசையமைப்பாளர் டென்மா.
பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘குண்டு’ படத்தின் பாடல் வீடியோ இதோ! வீடியோ