அழகான ஆண் குழந்தைக்கு அம்மாவானார் ரேஷ்மி மேனன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 12, 2019 08:55 PM
'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பாபி சிம்ஹா. அதனைத் தொடர்ந்து 'நேரம்' உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். 'ஜிகர்தண்டா' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது வென்றார்.

இவர் பிரபல நடிகை ரேஷ்மி மேனனை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ரேஷ்மி மேனனுக்கு நேற்று (11.11.2019) ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.
பாபி சிம்ஹா தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கிவரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Tags : Bobby Simha, Reshmi Menon