பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு' பட வீடியோ சாங்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 04, 2019 05:12 PM
இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்துள்ள படம் 'இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு'. அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் தினேஷிற்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரித்விகா, முனீஷ்காந்த், ஜான் விஜய், லிஜீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு டென்மா இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து மாவுலியோ மாவுலி என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனிக்கொடி எழுத, ஸ்வேதா மோகன், டென்மா ஆகியோர் பாடியுள்ளனர்.
பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு' பட வீடியோ சாங் வீடியோ
Tags : Pa Ranjith, Dinesh, Anandhi