Nenjuku Needhi

‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ ஃபர்ஸ்ட்லுக்… இணையத்தில் வைரல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா ரஞ்சித் இயக்கவுள்ள வேட்டுவம் திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

Pa Ranjith vettuvam movie first look viral in internet

Also Read | KGF இயக்குனர் கதையில் அடுத்த படத்தின் பூஜை… ஹோம்பலே பிலிம்ஸ் வெளியிட்ட சர்ப்ரைஸ் update!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா…

75 ஆவது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டிலுள்ள கேன்ஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு திரைப்படவிழாவில் இந்திய கலைஞர்கள் அதிகளவில் கலந்துகொண்டுள்ளனர். இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு, கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளனர். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் மாதவன், நடிகைகள் பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் நடுவர்கள் குழுவின் இந்திய நடிகையான தீபிகா படுகோனும் இடம்பெற்றுள்ளார்.

Pa Ranjith vettuvam movie first look viral in internet

பா ரஞ்சித் பங்கேற்பு…

இந்நிலையில், அட்டகத்தி, கபாலி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல தமிழ் இயக்குனர் பா. ரஞ்சித், கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அவரின் அடுத்த படமான ‘வேட்டுவம்’ ஃபர்ஸ்ட் லுக்கை அங்கு வெளியிட்டார். திரைப்பட விழாவில் அவர் இடம்பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

Pa Ranjith vettuvam movie first look viral in internet

வேட்டுவம் ஃபர்ஸ்ட் லுக்…

பா ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் ஸ்டுடியோவோடு  கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து  முதல் தயாரிப்பாக  இயக்குனர் பா.இரஞ்சித் வேட்டுவம் என்ற படத்தை உருவாக்குகின்றனர். இதனை பா.இரஞ்சித் எழுதி இயக்குகிறார். இந்நிலையில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியான வேட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது. போஸ்டரில் புலி ஒன்று இடம்பெறும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் எதுவும் இடம்பெறவில்லை.

Pa Ranjith vettuvam movie first look viral in internet

அடுத்தடுத்த படங்கள்…

பா ரஞ்சித் தற்போது ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து அவர் விக்ரம் நடிப்பில் ‘சீயான் 61’ படத்தை இயக்க உள்ளார். மேலும் கமல்ஹாசனுடன் இணைந்து விரைவில் பணியாற்ற உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இப்போது வேட்டுவம் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களை இயக்க உள்ளார் என்பதால் அந்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith vettuvam movie first look viral in internet

People looking for online information on Pa Ranjith, Vettuvam movie, Vettuvam movie first look poster will find this news story useful.