www.garudabazaar.com
iTechUS

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் 'தண்டகாரண்யம்' .. இயக்குநர் இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார்.

Pa Ranjith presents Thandakaranyam Director Athiyan Athirai

Images are subject to © copyright to their respective owners.

Also Read | விஜய்க்கு அடுத்த கதை ரெடி பண்ணிய ஜில்லா இயக்குனர்.! கதை கேட்டு மெர்சலான பிரபல இயக்குனர்...

தயாரிப்பாளராக பல வெற்றிப்படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

இன்னிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை  இரண்டாவது படமாக 'தண்டகாரண்யம்' படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியிருக்கிறது.

இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.  இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோஸ், மற்றும்  லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் தினேஷ், கலையரசன், ஷபீர் , பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

முதல்கட்டமாக ஓசூர் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.   பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்துக்கு இசையமைக்கிறார். எடிட்டிங்கை செல்வா RK மேற்கொள்ள,  கலை இயக்குநராக த.ராமலிங்கம் பணிபுரிகிறார்.  பாடல்களை உமாதேவி, தனிக்கொடி, அறிவு ஆகியோர் எழுதுகின்றனர்.

சண்டைப்பயிற்சியை பிசி அளிக்க, ஸ்ரீகிரிஷ் நடனம் அமைக்கிறார். அதிதி ஆனந்த், S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஷ்வரன், பா.இரஞ்சித் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

PRO - குணா.

Also Read | மற்றுமொரு சோகம்.! பிரபல ரஜினி, கமல் படங்கள் & ‘சுயம்வரம்’ பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.!

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith presents Thandakaranyam Director Athiyan Athirai

People looking for online information on Athiyan Aathirai, தண்டகாரண்யம், Irandam Ulaga Porin Kadaisi Gundu, Pa Ranjith will find this news story useful.