www.garudabazaar.com

விக்ரம் நடிக்கும் "தங்கலான்".. பா. ரஞ்சித் பிறந்தநாளில் வெளியான புதிய BTS போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் புதிய BTS போஸ்டர் வெளியாகி உள்ளது.

Pa Ranjith Birthday Vikram Thangalaan Movie New BTS Poster

Also Read | "ஒரு தப்பு கண்ணுக்கு தெரியுது".. சைலண்டா கணக்கு போட்ட விக்ரமன்.. ஒரே லைன்ல Thug life பண்ண ராம் 😂!

"நட்சத்திரம் நகர்கிறது" படத்தைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Pa Ranjith Birthday Vikram Thangalaan Movie New BTS Poster

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pa Ranjith Birthday Vikram Thangalaan Movie New BTS Poster

  இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒகேனக்கல் பகுதியில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Pa Ranjith Birthday Vikram Thangalaan Movie New BTS Poster

இயக்குனர் பா. ரஞ்சித் & நடிகர் விக்ரமுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட BTS புகைப்படத்தை போஸ்டர் வடிவில் இயக்குனர் பா. ரஞ்சித் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

Also Read | நடிகர் சிம்பு திருமணம் குறித்து.. பதிலளித்த T.ராஜேந்தர் ..!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Birthday Vikram Thangalaan Movie New BTS Poster

People looking for online information on Pa Ranjith, Pa Ranjith Birthday, Thangalaan, Thangalaan Movie New BTS Poster, Vikram will find this news story useful.