www.garudabazaar.com

VIDEO: தங்கலான் ஷூட்டிங்கில் கிரிக்கெட்.. பிளிண்டாப் ஸ்டைலில் பவுலிங் போட்ட பா. ரஞ்சித்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பா. ரஞ்சித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Pa Ranjith Playing Cricket in Thangalaan Movie Shooting Spot

Images are subject to © copyright to their respective owners.

Also Read | PS2 : "காதலே வில்லனா இருக்கும்".. பொன்னியின் செல்வன் - 2 மேக்கிங் GLIMPSE.. வீடியோ!

நடிகர் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Pa Ranjith Playing Cricket in Thangalaan Movie Shooting Spot

Images are subject to © copyright to their respective owners.

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வருகிறது.  ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், இணைந்துள்ளார்.

Pa Ranjith Playing Cricket in Thangalaan Movie Shooting Spot

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது.  ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் படக்குழுவினர் உடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவில் இயக்குனர் பா. ரஞ்சித் வேகப்பந்து வீச்சு செய்தார். அவருடைய பந்துவீச்சு பார்ப்பதற்கு இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் ஆண்ட்ரு பிளின்டாப் போல உள்ளது.

Also Read | 'லால் சலாம்' படத்தில் பிரபல நடிகரின் மனைவி?.. 30 வருடங்களுக்கு பிறகு நடிப்பில் ரீ- என்ட்ரி!

VIDEO: தங்கலான் ஷூட்டிங்கில் கிரிக்கெட்.. பிளிண்டாப் ஸ்டைலில் பவுலிங் போட்ட பா. ரஞ்சித்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Playing Cricket in Thangalaan Movie Shooting Spot

People looking for online information on Pa Ranjith, Thangalaan, Thangalaan Movie Shooting Spot, Vikram will find this news story useful.