www.garudabazaar.com

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய 'LEO' பட பிரபலம்.. வைரலாகும் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் LEO படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Leo Movie Writer Ratna Kumar Back to Chennai from Kashmir

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சன்னி லியோன் சமூக வலைத்தள பக்கம் முடக்கமா..? அவரே வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சில நாட்களுக்கு முன் வெளியானது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படத்தின் வசன கர்த்தா ரத்னகுமார் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இன்று பதிவிட்டுள்ளார்.‌ அதில், "நான் ஊருக்கு கிளம்பிட்டேன்" என தலைப்பிட்டு காஷ்மீர் ஶ்ரீநகர் விமானத்தில் இருந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rathna Kumar (@mr.rathna)

Also Read | பிறந்து 2 வாரமான தனது குழந்தைக்கு தாலாட்டு பாடிய பிரபல சூப்பர் சிங்கர் 😍..   வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Leo Movie Writer Ratna Kumar Back to Chennai from Kashmir

People looking for online information on Leo, Ratna Kumar, Writer Ratna Kumar will find this news story useful.