www.garudabazaar.com

பா.ரஞ்சித் படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்.. தெறிக்கவிடும் போஸ்டர் லுக்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தங்கலான்' படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் இணைந்துள்ளார்.

Daniel Caltagirone on the sets of Chiyaan Vikram starrer Thangalaan

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மகிழ் திருமேனி சார்பில் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திராவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை.!

"நட்சத்திரம் நகர்கிறது" படத்தைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Daniel Caltagirone on the sets of Chiyaan Vikram starrer Thangalaan

Images are subject to © copyright to their respective owners.

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

  இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது.  ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Daniel Caltagirone on the sets of Chiyaan Vikram starrer Thangalaan

Images are subject to © copyright to their respective owners.

  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட BTS புகைப்பட போஸ்டர் மூலம் இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் இவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Daniel Caltagirone on the sets of Chiyaan Vikram starrer Thangalaan

Images are subject to © copyright to their respective owners.

டேனியல் கால்டகிரோன்,   The Beach, Lara Croft Tomb Raider: The Cradle of Life,   The Pianist ஆகிய  படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Also Read | 1000 கோடி வசூலை தொட்ட ஷாருக்கானின் 'பதான்'.. 5-வது படமாக படைத்த மாஸ் சாதனை!

தொடர்புடைய இணைப்புகள்

Daniel Caltagirone on the sets of Chiyaan Vikram starrer Thangalaan

People looking for online information on Chiyaan Vikram, Daniel Caltagirone, Thangalaan will find this news story useful.