IRAVIN NIZHAL
www.garudabazaar.com

அடடே..பா. ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது.. ஆடியோ உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie audio rights bagged by Think Music

Also Read | சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' கர்நாடக உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! அப்படி போடு

நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, 'ரைட்டர்' போன்ற படங்களையும் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.

கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்தாண்டு ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. குத்துச்சண்டை போட்டிகளை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவானது.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie audio rights bagged by Think Music

இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படம்  “நட்சத்திரம் நகர்கிறது” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார். இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய தென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இன்று வெளியிடப்பட்ட போஸ்டரில் இது அறிவிக்கப்பட்டது.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie audio rights bagged by Think Music

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில் படப்பிடிப்பு நடத்தி, இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் படக்குழு நிறைவுச்செய்துள்ளது. இந்த படத்தில் பா. ரஞ்சித் மனைவி அனிதா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie audio rights bagged by Think Music

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.  சர்ரியலிசம் பாணியில் இந்த போஸ்டர் அமைந்தது. பின் நவீனத்துவ பாணியில் அமைந்த படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியானது. மேலும் படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது.

Also Read | இந்திராகாந்தியாக மாறிய கங்கனா ரனாவத்.. 'எமர்ஜென்சி' படத்தின் அசரவைக்கும் FIRST LOOK டீசர்!

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie audio rights bagged by Think Music

People looking for online information on Natchathiram Nagargirathu Movie, Natchathiram Nagargirathu Movie Updates, Pa Ranjith, Think Music will find this news story useful.