மாதவனுடன் ஸ்பெஷல் புராஜெக்ட்டில் ஒப்பந்தமான பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 31, 2019 02:25 PM
பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான அலெக்சாண்டர் பாபு தனது அடுத்த புராஜெக்ட் குறித்த தகவலை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
![Popular stand-up comedian Alexander Babu to work with Madhavan Popular stand-up comedian Alexander Babu to work with Madhavan](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-stand-up-comedian-alexander-babu-to-work-with-madhavan-photos-pictures-stills.jpg)
காமெடியன், யோகா டீச்சர் என பன்முகம் கொண்ட அலெக்சாண்டர் தனது திரைப்பட பிரவேசம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எவர்க்ரீன் சாக்லெட் பாயான நடிகர் மாதவனுடன், இந்த ஸ்பெஷல் புராஜெக்ட்டில் பணிபுரிந்ததன் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இது குறித்த உரிய அறிவிப்பிற்கு தான் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமேசான் ப்ரைமில் அலெக்சாண்டரின் ‘அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ என்ற சீரிஸ் முதல் ஸ்டாண்ட் அப் ஸ்பெஷல் நிகழ்ச்சியாக ஸ்ட்ரீம் ஆனது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இறுதியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படத்திற்கு பிறகு, தற்போது நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘ராக்கெட்ரி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் நடிகர் மாதவன் தீவிரமாக உள்ளார். மேலும், அனுஷ்கா நடிக்கும் ‘நிசப்தம்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.