''என் கணவர் மீது குற்றச்சாட்டுனா நேரா சொல்லுங்க' - அனுஷ்கா சர்மா கோபம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 01, 2019 01:02 PM
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன் திறமையான செயல்பாடுகளால் அணியை வெற்றிகரமாக வழி நடித்தி வருகிறார். இவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஃபரோக் என்பர் அனுஷ்கா சர்மா மீத குற்றச்சாட்டு ஒன்று வைத்தார். அதில் உலக கோப்பையின் போது இந்திய அணியின் தேர்வாளர்களிடமிருந்து அனுஷ்கா டீ வாங்கினார் என்பது தான் அந்த குற்றச்சாட்டு.
இந்நிலையில் இதுகுறித்து அனுஷ்கா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''என் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அதற்கெல்லாம் அமைதியாக இருந்தேன்.
இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது. உங்களுக்கு என் இந்திய அணியின் தேர்வாளர்கள் மீது எதாவது குற்றச்சாட்டு இருந்தால் அதனை நேரடியாக சொல்லுங்கள். என் பெயரை இழுக்காதீர்கள். கடந்த வருடம் என் கணவரின் கிரிக்கெட் செயல்பாடுகள் குறித்து என்னை குற்றம்சாட்டப்படது. அப்போது அமைதியாக இருந்தேன்.
வேர்ல்டு கப் போட்டியில் என் சொந்த செலவில் தான் பங்கேற்றேன். மேலும் ஃபேமிலி பாக்ஸில் தான் உட்கார்ந்து மேட்ச் பார்த்தேன். செலக்டர்ஸ் பாக்ஸில் உட்கார்ந்து பார்க்கவில்லை. அடுத்த முறை யார் மீதாவது குற்றச்சாட்டு தெரிவிக்க வேண்டுமென்றால் ஆதாரங்களுடன் நேரடியாக தெரிவியுங்கள். அது என் கணவராக இருந்தாலும் சரி. அப்புறம் நான் காபி தான் குடிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.
— Anushka Sharma (@AnushkaSharma) October 31, 2019