‘பாகுபலி’ ஸ்டார்ஸின் லண்டன் ரீயூனியன் - Pics
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 19, 2019 12:19 PM
பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படங்கள் உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை குவித்தது.

உலக அரங்கில் தென்னிந்திய சினிமாவிற்கு அடையாளம் தேடித் தந்த ‘பாகுபலி’ திரைப்படங்களுக்கு மக்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ், தமன்னா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை கவர்ந்தனர்.
‘பாகுபலி’ படக்குழுவினருக்கு இது வெறும் திரைப்படம் மட்டுமல்லாது அவர்களது வாழ்வில் மறக்க முடியாத பயணமும் கூட. இந்நிலையில், பாகுபலி பிரபலங்கள் மீண்டும் இணைந்துள்ளனர். ஆனால் இம்முறை மற்றொரு படத்திற்காக அல்ல, இதே படத்திற்காக லண்டனில் நடைபெறவுள்ள எம்.எம்.கீரவாணியின் லைவ் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்காக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா சார்பில் லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் இன்று (அக்.19)ம் தேதி, எம்.எம்.கீரவாணியின் லைவ் ஷோ நடைபெறுகிறது. இதற்காக பாகுபலி திரைப்படத்தின் பிரபலங்கள் அனைவரும் லண்டன் சென்றுள்ளனர். நடிகர்கள் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, இயக்குநர் ராஜமௌலி, தயாரிப்பாளர் ஷோபு ஆகியோர் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.