டிரெய்லருக்கு முன் புது போஸ்டர் மூலம் சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி விஜய்யின் பிகில் டீம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (அக்டோபர் 12) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

New Poster released from Thalapathy Vijay, Nayanthara, Altee's Bigil

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை அடிப்படியாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இன்று மாலை டிரெய்லர் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புது போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளது.