"ஸ்ரீதேவியின் கனவு நனவானது.. இன்று ‘நேர்கொண்ட பார்வை’ Premiere Show" - போனி கபூர் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் உலக ப்ரீமியர் ஷோ இன்று திரையிடப்பட்டது.

Boney Kapoor on Singapore Premiere show Ajith's Nerkonda Paarvai

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.  ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.8ம் தேதி உலகம் முழுவதும்  ரிலீசாகிறது. இந்நிலையில், வழக்கமாக பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ள படங்களின் ப்ரீமியர் ஷோக்கள் வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்னரோ அல்லது வெளியீடு அன்றைக்கோ இருக்கும். ஆனால் சமீப காலங்களில் முதன்முறையாக, 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ப்ரீமியர் காட்சி ரிலீசுக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் இன்று 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடல் ஆரம்பிக்கிறது. எனது மனைவி ஸ்ரீதேவியின் கனவை நான் நிறைவேற்றிவிட்டேன். அஜித்குமார், ஹெச் வினோத், ஒட்டுமொத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியம் இல்லை.  இதை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.