Veetla Vishesham Others Page USA

இந்த வாரம் தியேட்டர் & OTT-ல் ரிலீஸாகும் தமிழ் படங்கள் & சீரிஸ்… ஒரு பார்வை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜூன் 17 ஆம் தேதி நாளை திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் பற்றிய ஒரு பார்வை.

June 17th theater and OTT release full details

Also Read | “பெற்றோரை அவர்கள் இருக்கும்போதே… ”… ‘டான்’ பார்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் Tweet

பேமிலி டிராமா வீடல் விசேஷம்…

LKG மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களின் வெற்றியை அடுத்து தற்போது RJ பாலாஜி, போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வீட்ல விஷேசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆகும். இந்த திரைப்படத்தை இயக்கியும் உள்ளார் பாலாஜி. இந்த படத்தின் வித்தியாசமான ப்ரமோஷன்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளனர் படக்குழுவினர். வீட்டில் திருமண வயதில் மகன் இருக்கும் போது அவரின் அம்மா தனது மத்திம வயதில் கர்ப்பமாகும் போது அதை குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் சொல்லும் படமாகவும் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு குடும்ப ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாளை இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

June 17th theater and OTT release full details

நயன்தார நடிக்கும் திரில்லர்…

SR பிரபுவின் டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் ’O2’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் GS இயக்கியுள்ளார்.  டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை இந்த திரைப்படம் நேரடியாக ரிலீஸ் ஆகிறது.  ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான்  “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக யுடியூப் புகழ் சிறுவன ரித்விக் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு ரிலீஸாகும் நயன்தாராவின் முதல் படமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக இந்த படத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

June 17th theater and OTT release full details

சுழல்- வெப் தொடர்…

விக்ரம் வேதா பட புகழ் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி தம்பதியினர் கதை எழுத, ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன் மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கியக் கதபாத்திரத்தில் நடிக்கும் ‘சுழல் என்ற புதிய வெப் சீரிஸை குற்றம் கடிதல் இயக்குனர் பிரம்மாவும், கிருமி இயக்குனர் அணுசரனும் இயக்கியுள்ளனர். நேரடி அமேசான் ப்ரைம் வெளியீடாக வர உள்ள இந்த தொடர் 5 மொழிகளில் வெளியாகிறது.

June 17th theater and OTT release full details

ஒரு சிறிய நகரத்தில் காணாமல் போகும் சந்தியா என்ற இளம் பெண்ணை தேடும்போது வெளிவரும் பயங்கரமான உண்மைகள் பற்றிய கதை என சொல்லப்படுகிறது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை  ஜூன் 17 ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.  திறமையான முன்னணி நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் பங்காற்றிய இந்த வெப் தொடர் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒரு தொடராக அமைந்துள்ளது.

Also Read | “அம்மாக்கு என்னாச்சுப்பா…” திணறும் சத்யராஜ்… கலகலப்பான ’வீட்ல விசேஷம்’ Sneak peek காட்சி

June 17th theater and OTT release full details

People looking for online information on June Month OTT Release Movie, OTT Release Movie will find this news story useful.