நயன்தாராவின் இந்த படத்தில் இருந்து செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஐரா' படத்தைத் தொடர்ந்து நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்து வெளியாகவிருக்கும் படம் 'கொலையுதிர் காலம்'. இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.

Nayanthara's new film Kolaiyuthir Kaalam got U/A Certificate

இந்த படத்தை எக்ஸட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக மதியழகன் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு கோரே கெரியாக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.   இந்த படத்தில் நயன்தாராவுடன் பூமிகா, பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இந்த படம் தற்போது சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் இருந்து ஹிப்ஹாப் ஆதி இசையில் டக்குனு டக்குனு என்ற பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.