சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான படம் 'ஐரா'. ஹாரர் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்துக்கு சுந்தர மூர்த்தி கே.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு சுதர்ஷன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து மேகதூபம் என்கிற பாடல் வெளியாகியுள்ளது. தாமரை எழுதியுள்ள இந்த பாடலை பத்மபிரியா ராகவன் பாடியுள்ளார். நயன்தாராவுக்கும் கலையரசனுக்கும் இடையேயான யதார்த்தமான காதலை சொல்லும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.
நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள 'கொலையுதிர் காலம்' படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை 'உன்னைப் போல் ஒருவன்', 'பில்லா 2' படங்களின் இயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது விஜய்யுடன் தளபதி 63, சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் ஆகியோருடன் 'சைரா' ஆகிய படங்களில் நடித்துருகிறார். சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' மே மாதம் வெளியாகவுள்ளது.
நயன்தாராவின் 'ஐரா'வில் இருந்து வெளியான மேகதூதம் வீடியோ பாடல் இதோ! வீடியோ