Super Deluxe All Banner USA

'தளபதி 63'யில் நயன்தாரா குறித்த சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தெறி', 'மெர்சல்' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படம் தளபதி 63. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், யோகிபாபு, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Shooting update Nayanthara in Vijay's Thalapathy 63

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா சில நாட்களுக்கு முன்பு கலந்து கொண்டார். தற்போது அவர், சிரஞ்சீவியின் சைரா என்ற படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2 வது வாரத்தில் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஐரா படம் வருகிற மார்ச் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.