www.garudabazaar.com

பிரபல விமான நிலையத்தில் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா & விக்னேஷ் சிவன்.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா. நயன்தாரா, ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன்  பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

Nayanthara Vignesh Shivan with Twin Babies at Mumbai Airport

Images are subject to © copyright to their respective owners.

Also Read | குளத்தில் இறங்கி யானையை குளிப்பாட்டிய பிரபல நடிகை.. அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!  

அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார்.  இவர் கடைசியாக தமிழில் அண்ணாத்த,O2, காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட்  படங்களில் காணப்பட்டார்.

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் திரைப்படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார். மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படத்திலும் நடித்திருந்தார்.

Nayanthara Vignesh Shivan with Twin Babies at Mumbai Airport

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

சில மாதங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Nayanthara Vignesh Shivan with Twin Babies at Mumbai Airport

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு  கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் & நயன்தாரா இருவரும் மும்பை விமான நிலையத்தில் இரட்டை குழந்தைகளுடன் வருகை தந்த வீடியோ காட்சிகள் & புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஷாருக்கான் உடன் நயன்தாரா நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ராஜஸ்தான் மாநிலத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக மும்பையில் விக்னேஷ் சிவன் & நயன்தாரா தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | OSCARS 2023: ஆஸ்கர் விருதுக்கு ஓட்டு போட்ட நடிகர் சூர்யா.. அவரே பகிர்ந்த அருமையான தகவல்!

பிரபல விமான நிலையத்தில் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா & விக்னேஷ் சிவன்.. வைரலாகும் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Vignesh Shivan with Twin Babies at Mumbai Airport

People looking for online information on Mumbai Airport, Nayanthara, Nayanthara Vignesh Shivan with Twin Babies, Vignesh shivan will find this news story useful.