LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் நயன்தாரா நடித்த புதிய திரைப்படம்.. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடித்த “O2” திரைப்படம் பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

Nayanthara Starring O2 Movie World Television Premiere

Also Read | வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடன இயக்குனர்.. சூப்பர் BTS போட்டோ!

நயன்தாரா  நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்த த்ரில்லர் டிராமா திரைப்படம்  “O2”.

சிகிச்சைக்காக கொச்சி செல்லும் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொன்ன படம் தான்  “O2”.

Nayanthara Starring O2 Movie World Television Premiere

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். மகனாக ரித்விக் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவின் 8 வயது பையனாக நடித்த

ரித்விக் ஏற்கெனவே யூடியூப்பில் பல வேடங்களில்  ஆண், பெண், வாலிபர், முதியவர், போலீஸ் என்று பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். 

இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லனாக பிரபல த்ரில்லர் படமான K13 படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் நடித்துள்ளார்.

Nayanthara Starring O2 Movie World Television Premiere

இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து இப்படத்தைத் தயாரித்தனர். இந்த படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியானது.

இந்நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.‌ இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வருகின்றன.

 

Also Read | சூர்யா - சிறுத்தை சிவா படத்தில் இணைந்த பிரபல முன்னணி நடிகை.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Starring O2 Movie World Television Premiere

People looking for online information on Nayanthara, Nayanthara O2 Movie, O2, O2 Movie will find this news story useful.