LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

'PRINCE' படத்தின் ஷூட்டிங்.. இந்த பிரபல தியேட்டர்லயா? வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் புகைப்படங்களுடன் வெளியாகி உள்ளது.

SivaKarthikeyan Prince Movie Shooting in Chengalpatu Lathaa Cinemas

Also Read | ஷங்கர் இயக்கும் 'இந்தியன் - 2'.. படத்துல நடிகர்கள் யார் யாரெல்லாம் நடிக்கிறாங்க? முழு விவரம்

டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

SivaKarthikeyan Prince Movie Shooting in Chengalpatu Lathaa Cinemas

இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார்.  மரியா , போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் நடித்தவர். மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

SivaKarthikeyan Prince Movie Shooting in Chengalpatu Lathaa Cinemas

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கியது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.  இந்நிலையில் இந்த படத்தின் Batch Work படப்பிடிப்பு செங்கல்பட்டில் உள்ள பிரபல லதா சினிமாஸ் திரையரங்கில் நடந்து வருகிறது. இந்த தகவலை அந்த திரையரங்க உரிமையாளர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

SivaKarthikeyan Prince Movie Shooting in Chengalpatu Lathaa Cinemas

பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு  ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வலிமை படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

SivaKarthikeyan Prince Movie Shooting in Chengalpatu Lathaa Cinemas

Also Read | விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER.. தமிழ்நாட்டுல மட்டும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா?

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Prince Movie Shooting in Chengalpatu Lathaa Cinemas

People looking for online information on Prince, Prince Movie Shooting, Sivakarthikeyan, SivaKarthikeyan Prince Movie will find this news story useful.