LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடன இயக்குனர்.. சூப்பர் BTS போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.

Vijay Varisu Movie Shooting Spot BTS Image from Jani Master

Also Read | 'PRINCE' படத்தின் ஷூட்டிங்.. இந்த பிரபல தியேட்டர்லயா? வைரல் ஃபோட்டோ!

'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய பட்டாளமே நடிக்கிறது.

Vijay Varisu Movie Shooting Spot BTS Image from Jani Master

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. வாரிசு படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் , கடந்த 04.07.2022 அன்று முதல் துவங்கி  25.07.2022 வரை  படப்பிடிப்பு  நடந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vijay Varisu Movie Shooting Spot BTS Image from Jani Master

இந்நிலையில் இந்த படத்தின் 5- ஆம் கட்ட படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடன இயக்குனர் ஜானி தனது BTS புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். "வாரிசு படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில்" என இந்த புகைப்படங்களுக்கு தலைப்பிட்டு உள்ளார். கண்டெய்னர்கள் சூழ படப்பிடிப்பு தளம் அமைந்துள்ளது புகைப்படத்தின் மூலம் தெரிய வருகிறது.‌

Vijay Varisu Movie Shooting Spot BTS Image from Jani Master

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Vijay Varisu Movie Shooting Spot BTS Image from Jani Master

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றன.

இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது.

Also Read | பொன்னியின் செல்வன் படத்திற்காக LYCA உடன் கைகோர்த்த பிரபல OTT நிறுவனம்! வெளியான சூப்பர் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Movie Shooting Spot BTS Image from Jani Master

People looking for online information on Jani Master, Varisu, Vijay, Vijay Varisu Movie, Vijay Varisu Movie Shooting Spot will find this news story useful.