Breaking: தளபதி விஜய்யின் ‘பிகில்’ படத்தில் இப்போ லேடி சூப்பர் ஸ்டார் Turn!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் பங்கேற்றிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Nayanthara is part of the schedule till this month-end for Thalapathy Vijay's Bigil

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னை பின்னி மில்லி ‘பிகில்’ படத்தின்  Introduction Fight காட்சி படமாக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் எஸ்.எஸ்.என் கல்லூரியில் நடைபெற்றது. தற்போது பிரசாத் லேபில் அமைக்கப்பட்டிருக்கும் செட்டில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. 

இந்த ஷெடியூல் இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ள நிலையில், அதில் நடிகை நயன்தாரா தனது காட்சிகளில் நடிப்பார் என தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், இப்படத்தின் நயன்தாரா, ஏஞ்சல் என்ற கேரக்டரில் பிசியோதெரப்பி மாணவியாக நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து படத்தின் டீசர், இசை குறித்த தகவல்களை படக்குழு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.