Vikram 58: விக்ரம்-அஜய் ஞானமுத்து Combo-வில் இணைந்த பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 16, 2019 05:10 PM
‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய த்ரில்லர் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படத்தின் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.

‘விக்ரம் 58’ என்றழைக்கப்படும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாாரிக்கின்றன. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவிருக்கும் நிலையில், இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து படத்தின் ஒளிப்பதிவாரளாக சிவக்குமார் விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளன. ‘விடியும் முன்’, ‘இறுதிச்சுற்று’, ‘இறைவி’, ‘கோலமாவு கோகிலா’, ‘NGK’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தற்போது முதன் முறையாக இணைந்திருக்கும் விக்ரம் - அஜய் ஞானமுத்து கூட்டணியில் சிவக்குமார் விஜயனும் இணைந்திருக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சரித்திர காவியமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.