www.garudabazaar.com

ரொம்ப நாளைக்கு அப்புறம் டபுள் டிரீட் கொடுத்த அஜித்… உச்ச கட்ட களிப்பில் AK ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith vignesh shivan AK62 movie double treat for AK fans

வலிமை

அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய வலிமை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான் இசையமைத்திருந்தனர். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி நான்கு மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. வலிமையில் இடம்பெற்ற பைக் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களை புல்லரிக்க வைத்தன. அந்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் ஹாலிவுட் படங்களின் காட்சிகள் போல உள்ளதாக ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டன.

வலிமைக்குப் பிறகு

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு அஜித் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் அடுத்த படம் உருவாக உள்ளது. இவர்கள் மூவரும் இணையும் மூன்றாவது படமாக ‘அஜித் 62’ படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக அஜித்தின் வித்தியாசமான புகைப்படத்தைப் பகிர்ந்த தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறியிருந்தார்.

Ajith vignesh shivan AK62 movie double treat for AK fans

அஜித் 62 அறிவிப்பு

நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் "திரு.அஜித் குமார் நடிப்பில் திரு.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எங்களின் அடுத்த திரைப்படம் "AK 62", திரு.அனிருத் இசையமைக்க, திரு.சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் எங்களின் அடுத்த படத்தை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும். மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். திரு.அஜித் குமாருடன் கைகோர்த்ததில் லைக்கா மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஒரு குழுவாக, பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க லைக்கா நேர்மையான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது." என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ajith vignesh shivan AK62 movie double treat for AK fans

டபுள் ட்ரீட் கொடுத்த அஜித்

அஜித் 61 படமே இன்னும் தொடங்கப்படாத நிலையில் இப்போது அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அஜித்தின் ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகி வந்தது. ஆனால் இப்போது இன்னும் அஜித் 61 படமே தொடங்கப்படாத நிலையில் அதற்குள் அஜித் 62 படத்தின் அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

Ajith vignesh shivan AK62 movie double treat for AK fans

விக்னேஷ் சிவனும் அஜித்தும்

இயக்குனர் விக்னேஷ் சிவன், சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவான போடா போடி , நானும் ரௌடிதான், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் விரைவில் ரிலிஸ் ஆக உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு பாடலையும், சமீபத்தில் ரிலிஸான வலிமை படத்தில் வேற மாரி மற்றும் அம்மா செண்ட்டிமெண்ட் பாடல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith vignesh shivan AK62 movie double treat for AK fans

People looking for online information on Ajith 62, Lyca, Vignesh Shivn will find this news story useful.